Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-4


குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

முறைமழை பொய்த்தால் விழாக்கள், பூசை நடக்காமல் தேங்கிவிடும் செப்பு

குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.

வான்மழை பொய்த்தால் வழங்குகின்ற தானமும் ஏற்கும் தவமும் அரிது.

குறள் 20:
நீரின்றமையாதுலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு,

யாரெனினும் நீரின்றி வாழ்தல் அரிதாகும்! நீரோ மழைபெய்தால் தான்.

(தொடரும்) 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments