
நாளை உலகை யார் ஆளப்போகிறார்கள் – மனிதனா? இல்லையென்றால் AI-ஆ? எலான் மஸ்க் சொல்லிய கனிப்பு இதையே மக்கள் மனதில் பெரும் கேள்வியாக்கி விட்டது.
மஸ்க் அதிர்ச்சி தகவல்! எலான் மஸ்க் சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் உலகையே உலுக்கும் புது கருத்து கூறினார். “அடுத்த வருடம் (2026) வந்துவிட்டால், செயற்கை நுண்ணறிவு (AI) மனிதரை மிஞ்சும்” என்று கணித்து கூறியிருக்கிறார். அதுவும் 2030க்குள், மொத்த மனித குலத்தையும் விட AI புத்திசாலி ஆகிவிடும் என்று எச்சரித்தார். மக்கள் உடனே கேட்கும் கேள்வி – “மனுஷன் வேலை போயிடுமா? உலகமே AI கையில போயிடுமா?” என்பது தான்.
ஏன் இப்படிச் சொல்றார்? டெக்னாலஜி வேகம், தினமும் புதிய AI அப்டேட் வருது. Robot, Agent AI, Sovereign AI மாதிரி வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. xAI கம்பனியின் CEO எலான் மஸ்க், எப்போதுமே bold prediction சொல்லி public கவனத்தை கவர்ந்தவர். 2020-லேயே “2025க்குள் AI மனிதரை மிஞ்சும்”ன்னு சொன்னார்.
நிபுணர்கள் என்ன சொல்றாங்க? பல விஞ்ஞானிகள் சொல்லும் கருத்துப்படி, மஸ்க் சொன்ன டைம் லைன் கொஞ்சம் ஆப்டிமிஸ்டிக் ஆனாலும், முழுக்க சாத்தியமில்லாதது இல்லை. 2017-ல் MIT நடத்திய ஆய்வில், 45 ஆண்டுகளுக்குள் AI மனிதரை மிஞ்சும் வாய்ப்பு 50% என்று கூறப்பட்டது. அதேபோல், 2023-ல் 2,778 AI நிபுணர்கள் செய்த ஆய்வில், 2047க்குள் HLMI (Human Level Machine Intelligence) வரும் என்று கணிக்கப்பட்டது. அதனால், மஸ்க் சொல்வது சீக்கிரமா தோன்றினாலும், அது சாத்தியமில்லாதது அல்ல.
ஆபத்து என்ன? வேலைகள் போகும் அபாயம் இருக்கிறது – ஆஃபீஸ் வேலைகள், பங்குச்சந்தை அனாலிசிஸ், பத்திரிகை எழுதுதல், மெஷின் வேலைகள் எல்லாம் AI எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். பெரிய கம்பனிகளும் சில அரசுகளும் மட்டுமே முழு கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டால், சாதாரண மக்களுக்கு வேலையின்மை அதிகரிக்கும். அதேசமயம், AI தவறான முடிவெடுத்தால், விபத்து, நிதி நெருக்கடி, இராணுவ தவறான பயன்பாடு போன்ற பெரிய பிரச்சினைகளும் வரலாம். தமிழர்களுக்கான எளிய கேள்வி: “AI என் வேலையை காப்பாற்றுமா அல்லது பறிச்சிடுமா?” என்பது நம்ம பயமாக இருக்கிறது.
கல்வி முறை: கல்வி முறையில் பெரிய மாற்றம் வரும் – இனி மாணவர்கள் சாதாரண பாடங்களோடு மட்டும் இல்லாமல், புதிய திறன்கள் (Creativity, AI monitoring போன்றவை) கற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரும். பொருளாதாரத்தில், சிலருக்கு அதிக லாபம் கிடைக்கும், ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பும் நேரலாம். இதோடு, “மனிதனே தேவையா?” என்ற கேள்வி எழும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்பது எலான் பஸ்கின் பதிவாக உள்ளது.
AI பற்றி தமிழ்நாடு பார்வை: IT துறையில் வேலை அதிகமாக உள்ளதால், Chennai, Coimbatore மாதிரி நகரங்கள் நேரடியான தாக்கத்துக்குள்ளாகும். Call center, BPO(Business Process Outsourcing) வேலைகளில் ஏற்கனவே AI voice bots காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஆனால் Agriculture, Cinema, Spirituality மாதிரி தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய துறைகளை AI எளிதில் மாற்ற முடியாது. அதனால் மக்கள் மனசில் ஒரு கலவையான உணர்வு உருவாகிறது – “வேலை போயிடுமோ?” என்ற பயமும், “AI எங்களுக்காக என்ன செய்யுமோ?” என்ற ஆவலும் உள்ளது.
அரசு நடவடிக்கை? AI-யை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி பெரிய விவாதமாகி வருகிறது. யாராவது தவறாக பயன்படுத்தினால், அது இராணுவம், தேர்தல் மோசடி, மீடியா கட்டுப்பாடு போன்ற பெரிய பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவுக்கே இது ஒரு முக்கியமான விஷயம் – AI பயன்பாட்டுக்கு கண்டிப்பாக சட்டம் தேவை. தமிழர்களின் மனநிலை: “நம்ம அரசாங்கம் strong law வைக்குமா? இல்லையென்றால் பெரிய கம்பனிகளிடம் தாழ்ந்து போய்விடுமா?” என்ற கேள்வி உள்ளது.
முடிவில்: எலான் மஸ்க் சொல்லுற prediction உண்மையா பொய்யா தெரியாது. ஆனா ஒரு விஷயம் உறுதி: AI நாளைக்கு எல்லோருக்கும் தாக்கம் தரப்போகுது. வேலை, கல்வி, அரசியல், பணம் – அனைத்தையும் AI தொடும். “நாளைய உலகில் AI தான் ராஜாவா? மனிதன் இன்னும் ராஜாவா?” – இதுதான் இன்று தமிழ் மக்கள் மனசில் எழும் மிகப்பெரிய கேள்வி.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments