Ticker

6/recent/ticker-posts

Asia Cup 2025: இலங்கை அணி வெற்றி


நேற்று நடைபெற்ற(15) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்  2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹொங்கொங் அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜீஷன் அலி 17 பந்தில் 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ஓட்டங்களில் வெளியேறினார். 3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அன்ஷி ராத் 46 பந்தில் 48 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இலங்கைக்கு 150 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது ஹொங்கொங் மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் சேர்த்தது.

இறுதியாக ஹொங்கொங் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் அடித்தது.

150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பெதும் நிஷங்க அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார்.

அவர் 68 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க அடுத்துதடுத்து களமிறங்கியவர்கள் அணிக்கு தங்களது பங்களிப்பை செய்தனர்.

இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.




Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments