Ticker

6/recent/ticker-posts

ஒளவையாரின் நல்வழி பாடல்!-4


பாடல் - 7.

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

விளக்கம்: 

எப்படி எல்லாம் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது தான். அது புழுக்களும், நோயும் நிறைந்து வாழும் ஒரு குடிசை. இதை நல்லவர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். அதனால் தாமரை இலை தண்ணீரில் போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள்.இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்களிடம், இதைப் பற்றி பேச மாட்டார்கள்.

பாடல் - 8.

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

விளக்கம்:

உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.  ஆனாலும் விதி என்ன முடிவு செய்துள்ளதோ, அதை விடக் கூடுதலாக எதுவும் நம்மிடம் சேராது. 

அதனால் பணம் பணம் என்று அலைவதை விட்டு விட்டு, அடுத்தவர்களுக்கு உதவுக்கூடிய நல்ல மனிதர் என்ற பெயரையும், பெருமையையும், பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

(தொடரும்)


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments