
ஆசியக் கோப்பை தொடரில் செப்டம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் 9வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அதில் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் போராடி 154/5 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சாய்ஃப் ஹசன் 30, தன்சிட் ஹசன் அரை சதத்தை அடித்து 52 ரன்கள் எடுத்தனர். மிடில் ஆர்டரில் தவ்ஹீத் ஹ்ரிடாய் 26, ஜாகிர் அலி 12*, நுருள் ஹசன் 12* ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரசீத் கான் மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 155 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் எளிதாக வெல்லும் வென்று அந்த அணியும் இலங்கையும் நேற்றே சூப்பர் 4க்கு தகுதி பெறும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே அபாரமாக பந்து வீசிய வங்கதேசம் 20 ஓவரில் ஆப்கானிஸ்தானை 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
ஆப்கானிஸ்தானுக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் குர்பாஸ் 35, ஓமர்சாய் 30, கேப்டன் ரசித் கான் 20 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. வங்கதேசத்துக்கு நசும் அஹ்மத் 2, தஸ்கின் அஹ்மத் 2, ரிஷத் ஹொசைன் 2, ரஹ்மான் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம் 2வது வெற்றி பெற்றது.
அதன் காரணமாக குரூப் பி பிரிவில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் இலங்கை தங்களுடைய கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். கூடவே வங்கதேச அணியும் தாமாகவே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
அதே போல ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற தங்களது கடைசிப் போட்டியில் இலங்கையை தோற்கடிக்க வேண்டும். இலங்கை (+1.546), வங்கதேசம் (-0.270) விட ஆப்கானிஸ்தான் +2.150 என்ற சிறந்த ரன்ரேட்டை கொண்டுள்ளது. அதனால் இலங்கையை ஓரளவு நல்ல வித்தியாசத்தில் வீழ்த்தினாலே ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதே சமயம் இலங்கை 70 ரன்கள் அல்லது 50 பந்துகள் வித்தியாசத்தில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறும். வங்கதேசம் உள்ளே சென்று விடும்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments