
உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்து, இந்தியர்களுக்கு நிரந்தர வதிவிட (Permanent Residency) வாய்ப்பை வாழங்குகிறது.
பின்லாந்து அரசு, இந்தியர்களுக்காக ஒரு புதிய நிரந்தர வதிவிட திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக 8-வது ஆண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பின்லாந்து, இயற்கை அழகு நிறைந்த, சுத்தமான நகரங்கள் மற்றும் உயர்ந்த வாழ்க்கை தரத்திற்கு பெயர் பெற்ற நாடாகும்.
இப்போது, இந்தியர்கள் இந்த நாட்டில் நிரந்தரமாக வாழ, வேலை செய்ய மற்றும் குடும்பத்துடன் எதிர்காலத்தை கட்டமைக்க வாய்ப்பு பெறுகிறார்கள்.
Finland PR பெறுவதற்கு முக்கிய நிபந்தனைகள்
A வகை தற்காலிக வதிவிட அனுமதியில் (Residence Permit) 4-5 ஆண்டுகள் தொடர்ந்து வாழ வேண்டும். 2026 முதல் இது 6 ஆண்டுகளாக மாற்றப்படும்.
அந்த காலத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பின்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 40,000 யூரோ அல்லது பின்லாந்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் மற்றும் 2ஆண்டுகள் வேலை அனுபவம் அல்லது உயர்நிலை பின்லாந்து/சுவீடன் மொழி திறன் (C1) மற்றும் 3 ஆண்டுகள் வேலை அனுபவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.
PR பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்
கால வரம்பின்றி வாழும் மற்றும் வேலை செய்யும் உரிமை
குடும்ப உறுப்பினர்களுக்கு sponsor செய்யும் வாய்ப்பு
முழுமையான சுகாதார சேவைகள், சமூக பாதுகாப்பு, பள்ளி கல்வி, வேலை இழப்பு உதவி மற்றும் ஓய்வூதியங்கள்,பெரும்பாலான Schengen நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் வீட்டு வசதி, கடன் மற்றும் நிதி திட்டங்களுக்கு மேம்பட்ட அணுகல்இந்த வாய்ப்பு, இந்தியர்களுக்கு உயர்தர வாழ்க்கையை நோக்கி ஒரு புதிய பாதையை திறக்கிறது.
lankasri

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments