Ticker

6/recent/ticker-posts

குழந்தைக்கு மது, சிகரெட் சூடு; வெந்நீரில் முக்கி எடுத்து சித்ரவதை - காதலனுடன் தாய் வெறிச்செயல்!


குழந்தையை, தாய் கள்ளக்காதலனுடன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி, இரையுமன்துறை பகுதியை சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி பிரபுஷா(23). இவர்களுக்கு 2 மகன்கள்.

பிரபுஷாவின் வீடு அருகே ஓட்டல் நடத்தி வந்தவர் காஞ்சாம்புறத்தை சேர்ந்த சதாம் உசைன்(32). மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரபுஷாவுக்கும், சதாம் உசைனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து கணவன் மனைவியை பிரிந்து முதல் குழந்தையுடன் சென்றுவிட்டார்.

பின் பிரபுஷாவும், உசைனும் கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர். தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், 2வது குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணியுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் உசைன் குழந்தையை கம்பால் தாக்கி, இருவரும் மதுபானம் கொடுத்துள்ளனர்.

மேலும், சிகரெட் நெருப்பால் 10 இடங்களில் சூடு வைத்து குழந்தையை வெந்நீரில் முக்கி எடுத்துள்ளனர். இதனால் குழந்தை கதறியதால் உசைன் தூக்கி தரையில் வீசியுள்ளார். அதனால் குழந்தைக்கு விலா எலும்பு முறிந்துள்ளது.

உடனே மருத்துவமனையில் அனுமதித்ததில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ibctamilnadu

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments