
பாகிஸ்தானில் (Pakistan) குடும்பத்தினர் நால்வரை கொலை செய்த வழக்கில் சிறுவன் ஒருவருக்கு நூறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் குடும்பத்தினர் நான்கு பேரை சுட்டுக்கொன்றுள்ளார்.
சம்பவத்தில் சிறுவனின் தாயார் , மூத்த சகோதரர் மற்றும் இரு சகோதரிகள் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நேற்று (24) ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் என மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூபாய் 12.6 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments