
சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சீனாவை சென்றடைந்தார். சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர், எதிர்வரும்15 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.
தனது விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பெய்ஜிங்கில் "ஒரு எதிர்காலம்: பெண்களுக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோருடன் பல இருதரப்பு கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments