Ticker

6/recent/ticker-posts

கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்துவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

jvpnews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments