Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது


ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

கைதான பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றியவர் 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அவருடன் கைதான ஏனைய இரண்டு பேரும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைதான மூன்று சந்தேக நபர்களும் இன்று (17) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன்போது சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

சந்தேக நபர்கள் மினுவாங்கொடையைச் சேர்ந்த "நேவி தினேஷ்" என்ற நபரால் இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது

adaderanatamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments