
கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில் நண்டுகளைப் பார்த்திருக்கலாம்.
ஊதா நண்டைப் பார்த்ததுண்டா?
தாய்லந்தில் அந்த அரிய வகை நண்டுகள் காணப்பட்டுள்ளன.
தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு ஊதா நண்டுகளின் படங்களை Facebookஇல் பதிவேற்றியுள்ளது.
நண்டுகளின் உடலில் ஒரு பகுதி வெள்ளையாகவும் இன்னொரு பகுதி ஊதா நிறமாகவும் காணப்படுகிறது.
பேட்சபூரி (Phetchaburi) வட்டாரத்தின் Kaeng Krachan National Park பூங்காவில் அவை காணப்பட்டதாகப் பிரிவு சொன்னது.
அரிய வகை நண்டுகள் அங்கிருப்பது பூங்காவின் பல்லுயிர்ச்சூழல் ஆரோக்கியமாய் இருப்பதைப் பிரதிபலிப்பதாக அது கூறியது.
நண்டின் படங்களைக் கண்ட இணையவாசிகள் அதன் அழகில் பிரமித்துப் போயினர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments