
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கித்தாரியான பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்திக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (07) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments