Ticker

6/recent/ticker-posts

Ad Code



இரும்புக் கம்பி மார்பின் மீது பாய்ந்தும் பயணத்தை நிறுத்தாத பேருந்து ஓட்டுநர்


ஹாங்காங்கில் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தவரின் மார்பில் எங்கிருந்தோ பறந்துவந்த 2 மீட்டர் நீள இரும்புக் கம்பி பாய்ந்தது.

சம்பவம் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5.45 மணிக்கு நடந்ததாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.

பேருந்து தாய் லாம் (Tai Lam) சுரங்கத்திலிருந்து வெளியேறும்போது திடீரென்று ஓர் இரும்புக் கம்பி பறந்து வந்து பேருந்தின் முன்புறக் கண்ணாடியைத் துளைத்தது. பின்பு அது 65 வயது ஓட்டுநரின் இடது மார்பில் குத்தியது.

அப்போதும்கூட நிதானம் இழக்காமல் பேருந்தைப் பாதுகாப்பாகச் சாலை ஓரத்தில் நிறுத்தியபடி உதவி கேட்டுக் கூச்சலிட்டார்.

உடனே பயணி ஒருவர் காவல்துறைக்கும் மருத்துவமனைக்கும் தகவல் தந்தார்.

உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்கப்பட்டதால் ஓட்டுநர் உயிர் பிழைத்துத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் இரும்புக் கம்பி மற்றுமொரு வாகனத்திலிருந்து விழுந்து பேருந்தின்மேல் பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்தது.

காவல்துறை சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரிப்பதாய்க் கூறியது.

சம்பவத்தின்போது பேருந்திலிருந்த பயணிகள் எவரும் காயமடையாதவண்ணம் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திய ஓட்டுநரை நிறுவனம் பாராட்டியது.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments