Ticker

6/recent/ticker-posts

Ad Code



நேபாளத்தில் தொடரும் போராட்டம்!


நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடங்கப்பட்ட போராட்டம்,  பின்னர் ஊழல், வேலையின்மை மற்றும் அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு எதிரான கோபமாக வெடித்துள்ளது.

இப்போது அங்கே ஜென்-Z தலைமுறையினரின் தீவிரமான ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன; இது அரசியல் மற்றும் சமூக அமைப்பை புரட்டிப்போட்டுள்ளது. 

 “நெப்போ பேபி” (Nepo Baby) வீடியோக்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திய அவற்றை சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டதால், நேபாள அரசு, பதிவு செய்யப்படாத பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், எக்ஸ் உட்பட 26 சமூக வலைதளங்களை செப்டம்பர் 5, 2025 அன்று தடை செய்தது; இது நேபாள இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது!

காத்மாண்டு உட்பட பல நகரங்களில் இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு போராட்டங்களை நடத்தினர். இவை வன்முறையாக மாறி, பிரதமர், அதிபர், உள்துறை அமைச்சரின் இல்லங்கள், நாடாளுமன்றம் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 முதல் 30 பேர் வரை உயிரிழந்தனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போராட்டங்களின் அழுத்தம் காரணமாக, பிரதமர் கே.பி. சர்மா ஒலி 2025 செப்டம்பர் 9ம் திகதி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மற்றும் பல அமைச்சர்களும் பதவி விலகினர். சர்மா ஒலி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்றுள்ளார்; அவர் துபாயில் தஞ்சமடைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அரசு கவிழ்ந்ததை அடுத்து, நேபாளம் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், போராட்டங்கள் தொடர்கின்றன.

பிரதிநிதிகள் சபையைக் கலைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்;

கடந்த 30 ஆண்டுகளாக அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளை பற்றி விசாரணை செயுய வேண்டும். கல்வி, சுகாதாரம், நீதி, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கைகளாகும். 
புரட்சியின் அழுத்தம் காரணமாக  அரசு சமூக வலைதளங்கள் மீதான தடையை 2025 செப்டம்பர் 10, அன்று நீக்கப்பட்டபோதிலும், மக்களின் கோபம் முழுமையாக அடக்கவில்லை.

இந்திய உச்சநீதிமன்றம் நேபாளத்தின் வன்முறை குறித்து கவலை தெரிவித்து, இந்திய அரசியலமைப்பின் வலிமையைப் பாராட்டியுள்ளது. இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடந்த மக்கள் புரட்சிகளுடன் இதனையும் ஒப்பிட்டு, சர்வதேச ஊடகங்கள் இந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
நேபாளத்தில் அரசியல் குழப்பம் தொடர்கிறது; இராணுவம் பாதுகாப்பைக் கையில் எடுத்துள்ளதால், இளைஞர்களின் போராட்டங்கள் அடங்கியதாக இல்லை. இது எதிர்கால அரசியல் அமைப்பு மற்றும் ஆட்சி முறையை மறுவரையறை செய்யக்கூடும்!

இறுதியாகக் கிடைத்துள்ள செய்திகளின்படி, நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் போராட்டம் தற்போது அடங்கி வரும் நிலையில்,  காத்மண்டு பகுதியில் குவிந்த குப்பைகளை உள்ளூர்வாசிகளுடன் இணைந்து அங்குள்ள இளைஞர்கள் சுத்தம் செய்து வருவதாக அறிய முடிகின்றது.

பிற பகுதிகளில் இருக்கும் இளைஞர்களும், தன்னார்வலர்களும் சுத்தம் செய்யும் பணியில் பங்கேற்க சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுத்தம் செய்யும் பணியை எளிதாக்க சில தொண்டு நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தலைவர்கள் பலர் பதவி விலகியுள்ளதுடன் தலைமறைவாகியுமுள்ளதால் இராணுவத்தினரும், போலீஸாரும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments