
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர் – 4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ், தமதணி முதலில் களத்தடுப்பிலீபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹானின் 58 (45), சைம் அயூப்பின் 21 (17), மொஹமட் நவாஸின் 21 (19), பஹீம் அஷ்ரஃப்பின் ஆட்டமிழக்காத 20 (08), அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் ஆட்டமிழக்காத 17 (13), பக்கர் ஸம்னின் 15 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஷிவம் டுபே 4-0-33-2, குல்தீப் யாதவ் 4-0-31-1, வருண் சக்கரவர்த்தி 4-0-25-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் 74 (39), ஷுப்மன் கில்லின் 47 (28), திலக் வர்மானின் ஆட்டமிழக்காத 30 (19) ஓட்டங்களோடு 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments