Ticker

6/recent/ticker-posts

கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் திறனாய்வு


கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் 09-12-2025 ஆம் நாள் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

விழாவுக்கு கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி முனைவர் இரா.அன்பரசி அவர்கள் தலைமை தாங்கினார்.

உதவியாளர் திருமதி சுகந்தி வரவேற்புரை ஆற்றினார்.

தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர் குறள் யோகி முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள்,அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் சேனாவரையர் அவர்கள்,பேரூர் தமிழ்க் கல்லூரி ஆசிரியர் முனைவர் இலட்சுமிபதி அவர்கள் நடுவர்களாக இருந்து  வாழ்த்துரை வழங்கி திறனாய்வை,நேராய்வு செய்தனர்.

திருக்குறள் முற்றோதல் " 1330 குறளையும் 46 நிமிடத்தில் சொல்லி புதிய சாதனை படைத்தார் நான்காம் வகுப்பு மாணாக்கி செல்வராணி, தன் மழலை குரலில் மள மள என்று 1330 குறட்பாக்களும்  சொல்லி வியந்து பார்க்க வைத்தான் இரண்டாம் வகுப்பு மாணவன் செல்வன்- சாணாக்கிய மித்ரன். 

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி ஆண்டு தோறும் அந்த அந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெறும் .  
அதில் பள்ளி மாணவர்கள் 1330 திருக்குறட்பாக் களையும் மனப்பாடமாகச் சொல்ல வேண்டும் அப்படி சொல்லும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில், சென்னைக்கு அழைத்து திருக்குறளுக்கு என்று அரசு விழா எடுத்து தமிழக முதலமைச்சர் அவர்கள் கையால் இவர்களுக்குச் சால்வை  அணிவித்து, பாராட்டி, சான்றிதழ் வழங்கி, கூடுதல் சிறப்பாக 15,000 ரூபாய் பண முடிப்பும் வழங்குவார்கள்.

இந்த 2025 ஆம் ஆண்டு விழா டிசம்பர் 9 ஆம் தேதி கோவை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலகத்தில் இனிதே  நடந்தது. 
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்கள் முனைவர் மு.க.அன்வர் பாட்ஷா அவர்களும்,திரு.நித்தியானந்தபாரதி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். 

வருகை புரிந்த மாணவர்களில் இரண்டு பேர் மட்டுமே முழுமையாக 1330 திருக்குறள் பாடல்களும் ஒப்பித்தார்கள்.
திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு வழிகளைக் தமிழக அரசும் மற்றும் திருக்குறள் அமைப்புகளும் மற்றும் தமிழ் அமைப்புகளும் பெரும் முயற்சி எடுக்கிறார்கள். அனைவருக்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.அனைவருக்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தேநீர் விருந்து வழங்கப்பெற்றது.

நிறைவாக உதவியாளர்கள் திரு.சேகர், விசாலாட்சி மற்றும் ஜெயந்தி நன்றி தவில் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


 


Post a Comment

0 Comments