Ticker

6/recent/ticker-posts

Ad Code



காஸா சிட்டி தாக்குதல் - வெளியேறும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்


இஸ்ரேல் காஸா சிட்டியில் ராணுவத் தாக்குதலை நடத்தியதையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர்.

பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காஸா சிட்டிக்குள் நுழையும் காணொளியை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டது.

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன.

ஹமாஸ் அமைப்பையும் அதன் நட்பு அமைப்புகளையும் துடைத்தொழிப்பதே நோக்கமென்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 400,000 பாலஸ்தீனர்கள் ஏற்கனவே காஸா சிட்டியிலிருந்து வெளியேறியிருக்கின்றர்.

போர் தொடங்கியிலிருந்து ஆக மோசமான தாக்குதல்கள் நேற்று இரவு நடத்தப்பட்டதாய்க் கூறப்பட்டது.

அதில் 90க்கும் அதிகமானோர் மாண்டனர்.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments