
இத்தாலியின் வெனிஸ் (Venice) நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் காஸாவில் கொலைசெய்யப்பட்ட சிறுமியைப் பற்றிய திரைப்படத்தைக் கண்ட பார்வையாளர்கள் 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டியிருக்கின்றனர்.
திரைப்பட விழாக்களில் இதுவே ஆக நீண்ட நேரம் கொடுக்கப்பட்ட பாராட்டு எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை BBC ஊடகம் தெரிவித்தது.
ஹிந்த் ரஜாப் (Hind Rajab) எனும் 6 வயதுச் சிறுமி சென்ற ஆண்டு ஜனவரி மாதம் குடும்பத்தினருடன் சேர்ந்து காஸாவை விட்டுத் தப்பியோடும்போது இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றனர்.
அவர்களுக்கு உதவ முன்வந்த இரு மருத்துவ ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.
அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து "The Voice of Hind Rajab" எனும் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்திற்கு விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments