Ticker

6/recent/ticker-posts

இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தனது குடும்பத்தினர் முன் இந்தியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்திரமவுலி  டல்லாஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை விடுதியின் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அதே விடுதியில் பணியாற்றிய கியூபா நாட்டைச் சேர்ந்த யோர்தானிஸ் கோபாஸ் என்ற ஊழியரிடம் பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் அங்கிருந்த கத்தியை எடுத்து சந்திரமவுலியை தாக்கியதுடன் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே நாகமல்லையாவின் தலையைத் துண்டித்து கொலை செய்தார்.

யோர்தானிஸ் கோபாஸை காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து ட்ரூத் வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், கியூபாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குற்றவாளி இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் இருந்திருக்கவே கூடாது.

அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. முன்னாள் அதிபர் ஜோ பைடனின் தவறான குடியேற்றக் கொள்கைகளால் இதுபோன்ற குற்றவாளிகள் அமெரிக்காவில் சுற்றித் திரிகின்றனர்.

சட்டவிரோதமாக குடியேறி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இரக்கம் காட்டப்படாமல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments