
மலரெடுத்தால் மாலையக்
கட்டிக்க மனமில்ல
மாவெடுத்தால் பணியாரம்
சுட்டுக்கப் பிரியமில்ல
புள்ளியிட்ட கோலமும்
முழுமையாக்க முடிக்கவில்ல
துள்ளியாடிய காலிலும்
நடந்துக்கவும் வலுவில்ல
சமச்சு எடுத்துக்கிட்டா
சுவையுமில்ல
சமையத்திலே குழம்பிலே
உப்பின் தொல்ல
இரவும் பகலும் வருவதும்
பிடிக்கல
இருண்ட வான் நிலாவையும்
பிடிக்கல
ஆத்தாவின் அழைப்பும்
வெறுப்பை அள்ளிக்க
தோழியர் அழைப்புக்கும்
மறுப்புச் சொல்லிக்க
மஞ்சள் இட்டுக் குளிச்சிக்கவும்
விருப்பமில்ல
மகிழ்ச்சியாக்க சிரிச்சிக்கிட்டுப்
பேசிக்கவும் முடியல
குயிலின் பாட்டுக்கும்
மயக்கம் வந்துக்கல
குழந்தை அழகிலும்
ஈர்ப்பு எழுந்துக்கல
அலங்காரம் பண்ணிக்கவும்
அக்கறை எடுத்துக்கல
அலமேலு பெத்துக்கிட்ட
மவளின்நில
அல்லியிவள் நெஞ்சில
பெருஞ் சலிப்பும்
அத்தானே நேரமெல்லாம்
ஒன் நெனப்பும்
ஓடிக்குது மனசுக்குள்ளே
பாடிக்குது ஆசையினாலே
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments