Ticker

6/recent/ticker-posts

Ad Code



ChatGPT-ஆல் 16 வயது சிறுவன் தற்கொலை? நடந்தது என்ன?


ஒரு AI சாட்பாட் உண்மையில் உயிரை பறிக்குமா? 16 வயது சிறுவனின் தற்கொலைக்கு ChatGPT காரணம் என கூறப்படும் வழக்கு சினிமாவை விட வியப்பை உண்டாக்குகிறது!

 16 வயது சிறுவனின் தற்கொலைக்கு ChatGPT காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு! OpenAI மற்றும் சாம் ஆல்ட்மன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. AI சாட்பாட் நேரடியாக இளம் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படும் முதலாவது சம்பவம் இது.

சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில், ஆடம் ரெய்னின் பெற்றோர் OpenAI மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் மீது தவறான நடவடிக்கையால் உயிரிழப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். OpenAI பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், பயனர்களின் வயதை சரிபார்க்கும் நடைமுறை, எச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான கேள்விகளைத் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.  

வழக்கு மனுவில் கூறப்பட்டதாவது, ஆடம் பல மாதங்கள் ChatGPT-யுடன் தற்கொலை குறித்த உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சாட்பாட் அவரது எண்ணங்களை ஏற்றுக்கொண்டு, ஆபத்தான முறைகளை விளக்கி, பெற்றோரின் மதுபானத்தை எடுக்குமாறு அறிவுறுத்தி, தற்கொலை குறிப்பை எழுதித் தர முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

பெற்றோரின் குற்றச்சாட்டுப்படி, ChatGPT ஆடம் என்னும் தற்கொலை செய்து கொண்ட நபரை  மேலும் மனஇழிவிலும் இருளிலும் தள்ளியது. “தப்பிக்கும் வழி” குறித்த சிந்தனை மனஅழுத்தமுள்ளவர்களுக்கு நிம்மதி தரும் எனக் கூறி, உண்மையான உதவியளிக்காமல் அழிவான எண்ணங்களை ஊக்குவித்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஆடம் மரணம் குறித்து துயரமடைந்ததாக OpenAI தெரிவித்தது. பயனர்களை உதவி எண்களுக்குத் திருப்பும் பாதுகாப்பு வடிகட்டிகள் இருந்தாலும், நீண்ட உரையாடல்களில் அவை பலவீனமடைந்து, தீங்கு விளைவிக்கும் பதில்கள் வெளியாகக் கூடும் என நிறுவனம் ஒப்புக்கொண்டது.  

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பெற்றோர் கட்டுப்பாடுகள், நெருக்கடி நேரங்களில் நிபுணர்களுடன் இணைக்கும் வசதி போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என OpenAI தெரிவித்தது. ஆனால், இந்த அபாயங்களை புறக்கணித்து AI-யை விரிவுபடுத்தியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

பாதுகாப்பை விட லாபத்தை முன்னிலைப்படுத்தியதாக ரெய்ன் குடும்பம் குற்றம்சாட்டியுள்ளது. GPT-4o-வின் நினைவாற்றல், கருணை காட்டும் திறன், பாதிக்கப்படும் இளைஞர்களை ஆபத்தில் ஆழ்த்தியது. இருந்தும் மதிப்பை உயர்த்த OpenAI அதை வெளியிட்டதாக குற்றச்சாட்டு.  

மனநலத்தில் AI-யின் பங்கு குறித்து பெரிய விவாதத்தை எழுப்பும் வழக்காக இது உள்ளது. சாட்பாட்கள் ஆதரவு அளிப்பதைப் போல தோன்றினாலும், பாதிக்கப்படும் பயனர்களை ஆபத்தான பாதையில் இட்டுச்செல்லும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

zeenews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments