
ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. வெறும் 17 வயதிலேயே இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, அதேபோன்ற பவுன்சர் பந்தடி காரணமாக ஃபில் ஹுக்ஸின் நினைவை உயிரிழந்த சம்பவம் மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது.
நிகழ்வின் விபரம்
மெல்போர்னில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிளப் அணிக்காக விளையாடிய பென் ஆஸ்டின், கடந்த செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற நெட்பிராக்டீஸ் பயிற்சியின் போது சக இணைய வீரர் ஒருவர் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்டார். ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அந்த பந்து அவரது கழுத்துப் பகுதியில் நேரடியாகப் பட்டது. அதிர்ச்சியுடன் தரையில் விழுந்த அவரை அங்கு இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக மீட்டு மெல்போர்ன் மோனஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மருத்துவர்களால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. வியாழக்கிழமை மாலை மருத்துவர்கள் பென் ஆஸ்டின் மரணத்தை உறுதி செய்தனர்.
பென் ஆஸ்டின் மரணத்தை ஃபெர்ன்ட்ரீ கல்லி கிளப் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்து, "அவரை இழந்தது நம் அணிக்கு அளவிட முடியாத வலி," என்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் விக்டோரியா கிரிக்கெட் வாரியமும் இரங்கல் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் மைக் பைர்ட் தனது அறிக்கையில், "பென் ஆஸ்டின் குடும்பத்துக்கு நாங்கள் முழு ஆதரவும் நிச்சயமாக வழங்குவோம். இளவயதில் திறமையான ஒருவரை இழந்தது மிகவும் வேதனையானது," என்று கூறினார்.
மகனின் மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்த ஜேஸ் ஆஸ்டின் (பெனின் தந்தை) உணர்ச்சியுடன், "எனது மகனை இழந்தது எங்கள் குடும்பத்திற்கு இதயத்தை நொறுக்கும் துயரம். பந்தை வீசிய இரு சக வீரர்களும் மனமுடைந்துள்ளனர். அவர்களுக்கும் நாங்கள் ஆறுதல் அளித்து வருகிறோம்." என தெரிவித்தார்.
வீரருக்கு அஞ்சலி
பிரேக்டீஸ் மைதானமாக இருந்த ஃபெர்ன்ட்ரீ கல்லி கிளப்பில் இன்று பென் ஆஸ்டின் நினைவாக வீரர்கள் மலர் மாலைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பேட் வைத்து மரியாதை செலுத்தினர். சமூக ஊடகங்களில் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விக்டோரிய மாநில அரசின் பிரதிநிதிகள் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஃபில் ஹுக்ஸை நினைவூட்டும் துயர சம்பவம்
கடந்த 2014ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒரு உள்நாட்டு போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஃபில் ஹுக்ஸ் (Phil Hughes) சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து கழுத்தில் பட்டதால் மரணமடைந்தார். அந்த சம்பவத்திற்கு பின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தலையில் அல்லது கழுத்தில் பந்து பட்டால் உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டாய விதி அமல்படுத்தப்பட்டது. மேலும் ஹெல்மெட்டுகளின் பின்புறத்தில் கூடுதல் பாதுகாப்பு தகடுகள் சேர்க்கப்பட்டன. அந்த மாற்றங்களுக்கு மத்தியில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments