
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.10.2025) சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டி
இந்த கூட்டம் நாளைக்கு (அக்.10) நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டங்கள் விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. ஒரு சிறிய ஒளி விளக்கப்படம் (Powerpoint presentation) மூலமாக உங்களுக்கு நாங்கள் சொல்லயிருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் தெரியும் - கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திடவும், தங்களின் தேவைகளை கோரி பெறுவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டில் ஆறு முறை கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும். இதற்கு மேலும், சில நேரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படலாம்.
ஜனவரி 26 – மார்ச் 22 – மே 1 – ஆகஸ்ட் 15 – அக்டோபர் 2 – நவம்பர் 1 ஆகிய இந்த தேதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
இந்த முறை அக்டோபர் 2 அன்று festival காரணமாக அன்றைக்கு நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
கிராம சபைக் கூட்டத்தில், கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் பங்கேற்கவேண்டும் என்பது எப்போதும் அரசின் அறிவுரையாக இருக்கிறது. கிராம சபைக் கூட்டத்தில் 500 பேர் வரை மக்கள் தொகை இருக்கின்ற கிராமத்தில் குறைந்தபட்சம் 50 பேர் வரை பங்கேற்கலாம். 500 – 3000 பேர் வரை மக்கள் தொகை இருக்கின்ற கிராமத்தில் குறைந்தபட்சம் 100 பேர் வரை பங்கேற்கலாம் என Forum-ல் நாங்கள் தெரியபடுத்தியிருக்கிறோம். ஆகையால், Forum-ன்படி அங்கு இருக்கக்கூடிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.
ஒரு சிறப்பு என்னவென்று சொன்னால், நாளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சியின் வாயிலாக நேரடியாக உரையாற்ற இருக்கிறார். ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக இரண்டு முறை கலந்து கொண்டார்கள். அக்டோபர் 2-ஆம் தேதி 2021 அன்று பாப்பாபட்டி ஊராட்சி, மதுரை மாவட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டார்கள். மார்ச் 24-ஆம் தேதி அன்று செங்காடு ஊராட்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாண்புமிகு முதலமைச்சர் அவரகள் நேரடியாக கலந்து கொண்டார்கள்.
இந்த முறை நேரடியாக முதன்முறையாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறைந்தபட்சம் 10000 கிராம ஊராட்சிகளில் நாளை (11.10.2025) கிராம சபைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக அங்கு உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, Fiber optic cable மூலமாக கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களும் நேரடியாக ஒன்றிணைக்கப்படுகிறது. கிராமப்புறப் பகுதிகளில் இணைய தளம் இணைப்பு நேரடியாக போய் சென்று சேரவேண்டும்.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மையம் வரை (Village Panchayat Resource centre) அரசாங்கத்தின் இலக்கு என்னவென்றால், Fiber optic cable-ஐ கொண்டு வந்து ஒவ்வொரு கிராமப்புற ஊராட்சிக்கும் நேரடியாக இணையதள இணைப்பு வசதி உறுதியாக ஏற்படுத்தலாம். இது ஒரு உதாரணமான சாட்சியாக இருக்கிறது என்பதை தமிழ்நாடு அரசின் சார்பாக நாங்கள் பெருமையாக நாங்கள் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.
எந்தெந்த மாவட்டத்தில் இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லியிருக்கின்றோம். TANFINET சொன்னதுபோல, பெரும்பாலும், 11,100 கிராம பஞ்சாயத்து ஊராட்சிகளில் Fiber optic cable reach-ஆகிவிட்டது. நாளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக கிராம சபைக் கூட்டத்தில் இது சம்பந்தமாக உரையாற்றுவார்கள். அவருடைய உரை முடிந்த பிறகு, கிராம சபைக் கூட்டத்தில் இருக்கக்கூடிய கிட்டத்தட்ட 16 subject நாங்கள் indicate செய்திருக்கிறோம். அவைகள் விவாதிக்கப்படும். அதற்கு மேலே ஏதாவது special subjects இருந்தால் கூட விவாதிக்கப்படும்.
என்னென்ன கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்பதை ஒளி விளக்கப்படத்தின் மூலமாக விளக்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் கிராம சபைக் கூட்டத்தில் பலவகையான திட்டங்களைப் பற்றியும், குறிப்பாக அடிப்படை வசதிகள் என்னென்ன தேவையாக இருக்கின்றன என்பதை கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும். தற்போது, முதன்மையாக கருதப்படும் உடனடியாக நிறைவேற்றப்படும் மூன்று தேவைகள் என்ன என்பதை தேர்வு செய்து முதல் subject-ஆக நாங்கள் வைக்க இருக்கிறோம்.
உதாரணமாக, தண்ணீர் விநியோகம் இந்த பகுதிகளில் வரவில்லை – அதை இன்னும் மேம்படுத்தப்படவேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது – தெருவிளக்குகள் எங்கெங்கு தேவையாக இருக்கிறது – தெருவிளக்குகள் அமைக்க வேண்டிய சூழ்நிலையாக இருக்கலாம் – குப்பைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மூலமாக எவ்வாறு நகரத்தில் உள்ளது போன்று மின்சார வாகனத்தின் (e-carts) மூலமாக குப்பைகளை வீடு வீடாக சேகரிப்பது போல கிராமப்புறப் பகுதிகளில் கூட விரிவுபடுத்தப்படும்.
ஏற்கனவே, 18000 மின்சார வாகனம் (e-carts) கிராமப் பகுதிகளில் அந்த குப்பைகளை சேகரிக்கிறார்கள். எந்தெந்த பகுதிகளில் இன்னும் குப்பைகளை அகற்ற செய்யவேண்டிய பணிகள் இருக்கின்றன என்பதை மக்கள் கோரிக்கையாக அதில் தெரியப்படுத்தலாம்.
அதுபோன்று கிராமப்புற பகுதிகளில் இந்த தெருவில் சாலை வசதிககள் அமைக்கப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கலாம். இதுபோன்று இதர தேவைகள் கூட இருக்கலாம். அதாவது பஸ் வசதி செய்யப்படவேண்டும் என்ற சில துறைகளின் தேவைகள் கூட இருக்கலாம்.
முதல் மூன்று முன்னுரிமைகள் எது என்பது நாளைக்கு தீர்மானம் செய்யப்படும். மாலையில், பஞ்சாயத்து செயலாளர் மூலமாக TNRD- போர்ட்டலில் பதிவு செய்யப்படும். பதிவு செய்த பிறகு நாங்கள் மாவட்ட ஆட்சியர் தலைவர்களின் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டு, அரசின் சார்பாக மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து, பிரச்சனைகள் அனைத்தையும் மிகக் குறுகிய காலத்திற்குள் சரி செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும்.
அதன் பிறகு கணினியில் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, தலைமைச் செயலாளர் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை ஆய்வு செய்யப்பட்டு பிறகு முடிவெடுக்கப்படும்.
நம்ம ஊரு நம்ம அரசு என்ற தலைப்பின் கீழ் கண்டறியப்பட்ட திட்டங்கள், தேவைகள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு, வருகின்ற மாதங்களில் மிக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இழிவுபடுத்தும் பொருள்தரும் சாதிப் பெயர்கள் (Derogratory caste name) கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகள் போன்றவற்றின் பெயரை மாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசானை வெளியிடப்பட்டிருக்கிறது.
அவசியம் மாற்றப்படவேண்டியவை எடுத்துக்காட்டாக, ஆதிதிராவிடர் காலனி, ஹரிசன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்றவற்றிக்கு பதிலாக, பூக்கள் பெயர் போன்ற பொதுவான பெயரை பரிந்துரை செய்ய நாளை நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மேலும், உள்ளூர் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றலாம் என்றால் மாற்றப்படலாம் அல்லது மாற்ற வேண்டாம் என்றால் மாற்றப்பட வேண்டியதில்லை. உடனடியாக மாற்றம் செய்யாமல், உதவி இயக்குநர் அளவில் ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அளவில் ஆய்வு செய்யப்பட்டு;
சம்பந்தப்பட்ட அறிக்கையை ஊரகப் பகுதியில் இயக்குநர் மூலமாக நகரப் பகுதியில் உள்ள நிர்வாகத் துறை ஆணையர் மற்றும் பேரூராட்சித் துறை ஆணையர் மூலம் அரசிற்கு அனுப்பப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டு, பிறகு மாவட்ட அளவில் முறைப்படுத்தப்பட்டு, மீண்டும் அரசிதழ் பிறப்பிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாளை முதல் இது சம்பந்தமாக ஊரகப் பகுதியில் இந்த முறையில் விவாதிக்கப்படும்.
கிராமங்களில் ஏழ்மையான குடும்பங்களுக்கு அரசு எப்போதும் உதவி செய்யும். தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நலிவுநிலை குறைப்பு நிதியினை ஏழ்மையான மக்களுக்கு அவர்களின் வறுமையை ஒழிப்பதற்காக கடனுதவி கொடுக்கப்படும் ஒரு திட்டம் இருக்கிறது.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் கிராம வறுமை ஒழிப்புக் குழு என்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழுவை, கிராமத்தில் யார் யார் மிக ஏழ்மையான குடும்பங்கள் இருக்கின்றார்கள் என்பதை கண்டறிய சொல்லியிருக்கிறோம். அதை வைத்து, நாளை நடைபெறும் கிராம சபையில் வைத்து கிராமமே முடிவெடுக்கும். அதில் முன்னுரிமை பட்டியல் தயாரித்துவிடுவார்கள். அந்த முன்னுரிமைப் பட்டியலின்படி, அவர்களுக்கு தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் NRLM கீழ் நலிவுநிலை குறைப்பு நிதி வழியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் கடனாக 0% முதல் 4% வரை வழங்க கிராமமே முடிவெடுக்கும்.
இதில் நாளை பெயர் மட்டும் இருக்கும். அதன் பிறகு, யாரெல்லாம் முன்னுரிமை பட்டியலில் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அவ்வப்போது நிதி வரும்போது இந்த வருடம் மற்றும் அடுத்த வருடம் வரும் போது அவர்களின் வாழ்வாரத்திற்கான கடன் என்னென்ன? (கடை அமைப்பதற்கு, சுயநுகர்வு) என்பதை அறிந்து அவர்களுக்கு கடன் வழங்கலாம். அது அதிகாரிகள் அளவில் தேர்வு செய்ய வேண்டாம். அதனை அந்த குழுவே முடிவு செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர்தான் இறுதி செய்யப்பட வேண்டும்.
அடுத்து, இது தவிர கிராம ஊராட்சிகளில் இது வரைவுள்ள வரவு-செலவு குறித்த விவரங்களை கண்டிப்பாக கிராம சபையில் சொல்ல வேண்டும். அதுவும் விவாதிக்கப்படும். பிறகு, கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும். 100 நாள் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வரவு-செலவு கணக்கு கண்டிப்பாக ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபையில் வைப்பது நடைமுறையாக உள்ளது.
அது தொடர்பாக, ஏதேனும் குறை இருந்தால் விவாதிக்கப்படும். பிறகு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் என்னென்ன முன்னேற்றம் தற்போது இருக்கின்றது என்பதை சம்மந்தப்பட்ட கிராமங்களில் விவாதிக்கப்படும்.
அடுத்து, தூய்மை பாரத இயக்கம் (SBM) ஒன்றிய மற்றும் மாநில நிதியுடன் கூடிய திட்டம் இருக்கிறது. அதாவது கிராமங்களில் குப்பை இல்லாத தூய்மையான கிராமங்களாக இருக்க வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கிராமங்களில் உள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்படும்.
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவாதிக்கப்படும்.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மழை வந்தால் டயர், பிளேட்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் தேங்குகிறது. தண்ணீர் நீண்டகாலமாக தேங்க கூடாது.
அதிலிருந்து கொசு உற்பத்தி ஆகும். அது மாநகராட்சியில் நிறைய பேருக்கு வருவதை நாம் அறியலாம். ஆனால், கிராம புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதனால் இது தொடர்பாக விவாதிக்கப்படும்.
குழந்தை தொழிலாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விவாதிக்கப்படும்.
கிராம இளைஞர்களை தன்னுடைய வாழ்வாதாரத்திற்கான திறன் பயிற்சி கொடுப்பதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி அளிப்பது குறித்து விவாதிக்கப்படும்.
ஒன்றிய ஊரக வளர்ச்சி தெரிவித்ததன் மூலமாக, சபாசார் இணையதளத்தில் 7515 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை குறித்த வீடியோ பதிவுகளை பதிவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது தேசிய அளவில் இணையதளத்தில் பார்க்கலாம். இது குறித்து விவாதிக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலமாக பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் 50 சதவிகிதத்திற்கு மேலான SC/ST மக்கள் இருக்கக்கூடிய கிராமங்களில் அவர்களின் கிராமம் அடுத்த வருடம் என்னென்ன அடிப்படை தேவைகள் இருக்கின்றது என்பது குறித்து, கிராம வளர்ச்சித் திட்டம் தயார் செய்து கிராம சபையில் தீர்மானம் போட்ட பிறகு அது நிறைவேறும்.
முக்கியமாக, கிராம சபை என்பது ஊரக வளர்ச்சித் துறையின் முதுகெலும்பு. இந்த கிராம சபை நாளை நடைபெற உள்ளது. இதன் மூலமாக, அதன் முக்கியமான பொருள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
kalaignarseithigal

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments