Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-101


"ராஜகுமாரி  ராஜகுமாரி"  என்று ஆளை ஆள் சுரண்டிக் காட்டி சந்தோசத்தை வெளிக் காட்டியதுடன் கோசம் எழுப்பவும் ஆரம்பித்து விட்டார்கள் .

"ராஜகுமாரி வாழ்க, ராஜகுமாரி  வாழ்க" என்று கூடி இருந்த மக்கள் எல்லோரும் ராஜகுமாரியை அவர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அன்பும் நீதியும் மக்களோடு மக்களாய்ப் பழகும் குணமும் வேறு எந்த அரச வம்சத்திலும் அறிந்திடாத விடையம் அவர் சாதி மதம் பேதம் பார்ப்பதில்லை. ஏழை கொடுக்கும் நீரைக் கூட மறுக்காமல் அருந்தக் கூடிய மனம் படைத்த இளைய இளவசி ஆவார்  

மகளைக் கண்டு ஓடிய மகாராணி கட்டி அணைத்து ஆறத் தழுவி கண்ணீர் மல்க அழைத்தார் .அரண்மனை அரங்கத்துக்குள்ளே ராஜகுமாரி பொங்கிய கண்ணீரையும் துக்கத்தையும்  திரையோடு திரையாக மறைத்து விட்டு எல்லோரையும் வணங்கி  நடக்கத் தொடங்கினார். அப்போது காத்திருந்த பணிப் பெண்கள் பூக்களைத் தூவியவாறே தொடர்ந்தார்கள்.நேராக வந்த ராஜகுமாரி  மந்திரியின் அருகே சென்று மரியாதை நிமித்தமாய் வணங்கினார்.
 
மந்திரி "வாழ்க தாயே" என்று ஆசீ கூறினார். பின்னர் தன் தாய் மகாராணியின் பாதம் தொட்டு எழுந்து திரும்பி நின்று சபையோர் அனைவரையும் வணங்கி விட்டு அமர்ந்தார் .

மக்கள் கூட்டத்தில் ஓர் குரல் ஓங்கிய குரலாய்க் கூறியது .
"ராஜராஜ ராஜகுமாரி அவர்களே உங்களைக் கண்ட சந்தோசம், இன்று நான்கு பாத்திரம் உணவு உண்டது போன்று வயிறும் உள்ளமும் நிறைந்து விட்டது அம்மா .எங்கள் நாடு வெளிச்சம் கண்டு விட்டது."என்று கண்ணீரோடு கூறி தலை தாழ்த்தினான். கூடி இருந்த ஏனையோருக்கு அவை புதியவை இல்லை ஏன் ?என்றால் ராஜகுமாரியை நாட்டு மக்கள் பலர் பல விதமாய்ப் புகழ் பாடி அவர்கள் அன்பை வெளிக் காட்டுவது வழக்கம் .

அன்றும் அதுவே நடந்தது .ஆனால்  மருத்துவக் குழுக்கள் வியப்போடு கவனித்தனர் குமரன் உட்பட, 'அட இவர்கள் ராஜகுமாரியை எத்தனை ஆழமாகவா நேசித்தார்கள்?, அப்படி என்றால் ராஜகுமாரி எத்தனை நல்ல உள்ளம் படைத்தவராய் இருந்திருப்பார்.  இத்தனையும் மறந்து அவர் இருக்கும் போது மக்கள் மனம் நொந்து போய் இருந்தமை நன்றாகவே தெரிகிறதே,என் பாக்கியம் தான் இவர்களைக் காப்பாற்றியதும்' என்று குமரன் நினைத்துக் கொண்டு இருக்க சரவணன் மருத்துவர் கேட்டார் 
"என்ன குமரா சாதனை செய்து விட்டு அமைதியாய் அமர்ந்து இருக்காயே ஏன் என்னிடமாவது உண்மையைக் கூறி இருக்கலாமே" என்று சற்று மன வருத்தத்தை வெளிக் காட்டினான்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments