
குறள் மொழி 16
புறங்கூறாமை
16. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
 குறள் எண் : 190
குறள் மொழியின் பொருள் :
பிறர் குற்றத்தைப் பார்ப்பது போலவே தம் குற்றதையும் கண்டு திருந்தினால், வாழ்க்கையில் ஒரு துன்பமும் இல்லை.
நபிமொழி :
பிறருடைய குற்றங்களை அதிகமாகச் சிந்திப்பதை விட, தங்களின் குற்றங்களை அதிகமாகச் சிந்தியுங்கள். அதுவே நன்மை பயக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் ஆதாரம் : திருக்குர்ஆன் வசனம் 49 : 12
குறள் மொழி 17
சான்றாண்மை
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
குறள் எண் : 987
குறள் மொழியின் பொருள் :
தமக்கு தாங்கவொன்னாத் தீங்கு செய்தவர்க்கும் கூட நன்மையே செய்தல் வேண்டும், அத்தகைய மேலான நற்பண்பு இல்லாது போனால், சால்புடைமை என்னும் நற்பண்பால் ஒரு பயனும் இல்லாது போகும்.
நபிமொழி :
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிதமிஞ்சிய அன்பும். ஈகையும், இளகிய இரக்க மனமும் கொண்டவராகத் திகழ்ந்தார். மக்காவை வெற்றி கொண்ட மன்னர் முஹம்மது (ஸல்) அவர்கள், குரூரம் மிக்கவர்களைக் கண்டதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆத்திரம் கொள்ளவில்லை. ஆவேசம் அடையவில்லை. மாறாக, "எனக்கும், என்னுடைய தோழர்களுக்கும் நீங்கள் இழைத்த கொடுமைகளை எல்லாம் நான் அடியோடு மன்னித்துவிட்டேன். நீங்கள் கட்டுப்பாடு,நீங்கள் கட்டுப்பாடு... ஏதுமின்றி,சர்வ சுதந்திரமுடன் வாழலாம் "என்று அன்பு ததும்பக் கூறினார்.
இது வரலாற்றுச் சான்று ஆகும்.
வரலாற்று ஆசிரியர், ஆர்தர் கில்மென்.
ஆதாரம் நூல் : இஸ்லாத்தின் வரலாறு
(தொடரும்)

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments