
5.இல்வாழ்க்கை
குறள்41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.
இல்லான் குழந்தைகள் பெற்றோர் இவர்களுக்கு இல்லறத் தானே துணை
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
துறவி, வறியோர்கள், ஆதர வற்றோர்க்(கு) அறத்துணை இல்லறத்தான் தான்.
குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை.
வாழ்ந்தவர்கள், வாழ்வோர், விருந்தோம்பல், சுற்றத்தார் பேணுதல் இல்லறத்தான் பண்பு.
குறன் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
பழியின்றி சேர்த்த பொருளைப் பகுத்துக்
களித்துண்ணும் வாழ்வே உயர்வு.
(தொடரும்) 

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments