Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-8


குறள் 33:
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்கின்ற நற்செயலை எல்லாம் அறவழியில் செய்யவேண்டும் எங்கெனினும் செப்பு.

குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற

மனத்தளவில் குற்றமின்றி வாழ்தல் அறமே! மனவேடம் ஆரவாரந் தான்.

குறள் 35:
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்.

பொறாமையும் ஆசையும் கோபமுடன் வன்சொல் இலாத குணமே அறம்.

குறள் 36:
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை

அன்றன்றே நல்லறம் செய்யவேண்டும்! அப்புகழே,சென்றபின்பும் நிற்கும் நிலைத்து.

(தொடரும்) 


 


Post a Comment

0 Comments