Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-99


மந்திரி வெளியானதும் மருத்துவர்கள் அனைவரும் அரசியின் அழைப்பை ஏற்று மணிமண்டபம் புறப்படத் தயாரானார்கள். அப்போது மூத்த மருத்துவர் சுந்தரமூத்தி நாயனார் மட்டும் தன்னோட. மருத்துவப் பொருள் அடங்கிய பையையும் கையோடு எடுத்துக் கொண்டார். இதைக் கவனித்த சரவணன் மருத்துவர் கேட்டார் "ஏன்? ஐயா இவைகளையும் அரண் மனைக்கு போகையில் தூக்கி விட்டீர்கள் "
என்று .

அதற்கு அவர் ஒரு செருமல் சிறு புன்னகை இரண்டோடும் கூறினார்" அட என்னப்பா நீ, இப்படி கேட்டு விட்டாய் இனிமேல் நான் தானே மருத்துவப் பணியைத் தொடங்க வேண்டும். அது தான் கையோடு எடுத்து விட்டேன். 
திரும்பி வந்து எடுத்துச் செல்வது சிரமம் தானே ஏன் நேரத்தை விரையமாக்குவான். என்று கூறி முடித்தார்.

 உடனே சரவணன் "ஓ அப்படியா? சரிங்க ஐயா" என்று பதில் கூறி விட்டு மெதுவாக நகர்ந்தான். 

மருத்துவர்கள் அனைவரும் நன்றான உடைகளோடு அழகாய்ப் புறப்பட்டுச் சென்றார்கள் மணிமண்டபம் நோக்கி. அப்போது அங்கே ஊர் மக்களும் திரள் திரளாய் வந்து கொண்டு இருந்தார்கள்.  

"அட என்ன குமரா? உன்னை ஊர் முன் வைத்து நீ சரியான முறையில் வைத்தியம் செய்யாதவையைக் கூறி வழி அனுப்பப் போகிறார்களோ?
இருக்கும் இருக்கும் ஊர் மரியாதையோடு தானே நம்மை 
நம்பி அழைத்தார்கள் அதையே இப்போதும் செய்திடப் போகின்றார்கள் போல் இருக்கு. சரி விடு குமரா இதையெல்லாம் பெரிசு பண்ணிக் கவலைப் படாதே" என்றார் குமரனைப் பார்த்து மூத்த மருத்துவர் .

உடனே குமரன் "ஆமாம் ஐயா அரண்மனை வரும் போது ஒரு மனநிலை  போகும் போது ஒருவித மன நிலையோடு  போவது தான் 
விதி என்றால் யாரால் மாற்ற முடியும். மனதைத் நேர்த்தி விட்டுப் புறப்பட வேண்டியது தான். கவலை என்பதும் ஏமாற்றம் என்பதும் ஒருத்தருக்கு மட்டும் உரியவை இல்லையே ஐயா" என்றான் குமரன் கூறிக் கொண்டே உள்ளே நுழைந்து அமர்ந்து கொண்டார்கள் .

ஒரு புறம் ஊர் மக்கள் மறு புறம் மருத்துவர்கள் எதிரே அரச ஆலோசகர்கள் நடுவே மந்திரி சுற்றி வரை காவலர்கள் பணிப் பெண்கள் என்று பெரும் கூட்டமே கூடி இருக்க மகாராணி வருகை தந்தார் எல்லோரும் எழுந்து "வணக்கம்" இட்டு அமர்ந்து கொண்டனர் 

அரசியும் அமர்ந்து கொண்டார் .வாத்தியக் காரர்களும் அலங்கரித்த பல்லக்கும் வந்து காத்திருந்தனர். அப்போது படைத் தளபதி எழுந்து அரசிக்கு "வணக்கம்" வைத்து விட்டு ஊர் மக்களைப் பார்த்து "எனதருமை சொந்தங்களே, இன்றைய நாள் ஒரு மகிழ்வான பொன் நாள் சற்று நேரத்தில் அதை அறிவிப்பார் அரசி காத்திருங்கள்"  என்று கூறி புறப்பட்டான் பல்லக்கையும் வாத்தியத்தையும் தன்னோடு அழைத்துக் கொண்டு -

(தொடரும்) 

 


Post a Comment

0 Comments