Ticker

6/recent/ticker-posts

2 நாட்கள் கடும் சண்டைக்கு பின் காசாவிற்கு உதவிகளை அளிக்க இஸ்ரேல் அனுமதி


இரண்டு நாள் கடும் சண்டைக்கு பிறகு காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அளிக்கும் டிரக்குகள் செல்ல தொடங்கியுள்ளன.

இஸ்ரேல் ராணுவத்திற்கும்- ஹமாஸ் இயக்கத்திற்கும் கடந்த வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, தெற்கு காசாவில் உள்ள ரஃபா பகுதியில் இஸ்ரேலியப் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது. இந்தத் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் ராணுவம் காசா முழுவதும், குறிப்பாக ரஃபா மற்றும் நுஸெய்ரத் அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களையும், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியது. இதில் 45 பேர் வரை உயிரிழந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்களின் விளைவாக, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்திவைத்தது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் போர்நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பிறகு, உதவிப் பொருட்கள் செல்வதற்கான எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த டிரக்குகள், எகிப்தின் ரஃபா எல்லையை கடந்து காசா பகுதிக்கு செல்கின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஹமாஸ் இயக்கமும், இஸ்ரேல் ராணுவமும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

news18

 


Post a Comment

0 Comments