
உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாரடைப்பு மரணங்கள், மருத்துவ உலகையே கவலையில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, மாரடைப்பு (Heart Attack) அதிகாலை நேரங்களில் அதிகம் ஏற்படுவதால், அதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் இரவு நேரத்திலேயே தெரிய தொடங்குகின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பலர் மாரடைப்பை நெஞ்சு வலியுடன் மட்டுமே இணைந்தது என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில், உடலின் பல பகுதிகளில் வித்தியாசமான மாற்றங்களாகவும் அது வெளிப்படுகிறது.
சாதாரண வேலைகள் காரணமாக வரும் சோர்வு அல்லாமல், காரணமில்லாமல் இரவு நேரத்தில் அதிகமாகத் சோர்வாக தெரியும் உடல் சோர்வு, இதய நோயின் மிகப் பொதுவான ஆரம்ப சிக்னலாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பெண்களிடம் இது அதிகம் காணப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்கும் முன் உடல் இயல்புக்கு மாறாக சோர்வடைந்தால், அதை அசட்டையாகக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது மிக முக்கியம்.
இரவு தூக்க நேரத்தில் திடீரென இதயம் வேகமாகவோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ துடிப்பது, கவனிக்க வேண்டிய எச்சரிக்கை. மன அழுத்தம் அல்லது பயம் போன்ற காரணங்களால் இதயம் வேகமாக துடிக்கலாம். ஆனால் காரணமில்லாமல் அடிக்கடி இப்படியாகத் துடிப்பது, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் பிரச்சனை இருக்கலாம் என்பதை காட்டுகிறது. தாமதிக்காமல் இதற்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
மாரடைப்பு நெஞ்சு வலியால் மட்டுமே வெளிப்படாது. அந்த வலி இடது கை, தோள், கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கும் பரவலாம். சில சமயங்களில் தாடை வலி கூட இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். பலர் இதை பல் பிரச்சனை என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் நெஞ்சு வலி, வாந்தி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் தாடை வலியும் சேர்ந்து வந்தால், அது மிகக் கடுமையான எச்சரிக்கை.
எனவே, மாரடைப்பு அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெறுங்கள்
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments