Ticker

6/recent/ticker-posts

எதற்காக சாலைகளில் மஞ்சள், வெள்ளை கோடுகள் போடப்படுகின்றன?


இந்தியாவில் பயணிக்கும் போது ஒவ்வொரு சாலைகளின் நடுவில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் கோடுகள் போடப்பட்டிருக்கும். பலருக்கும் இந்த கோடுகள் எதற்காக போடப்பட்டுள்ளன என்பதை பற்றி தெரிந்திருக்காது. இவை வெறும் அழகிற்காகவோ அல்லது சாலைகளை பிரிப்பதற்காக மட்டுமே போடப்பட்டவை இல்லை. ஒவ்வொரு கோடுகளுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு. இவற்றை முறையாக தெரிந்து கொண்டு சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது விபத்துக்களை தவிர்த்தும், பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொள்ள முடியும். இந்த மஞ்சள் மற்றும் வெள்ளை கோடுகள் எதற்காக போடப்படுகின்றன? அவற்றிற்கு பின்னால் உள்ள விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

தொடர்ச்சியான வெள்ளைக்கோடு 

சாலைகளில் இடைவெளி இல்லாமல் நீண்ட வெள்ளை கோடு நடுவில் வரையப்பட்டிருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். இந்த கோடு வரையப்பட்டுள்ள சாலைகளில் நீங்கள் முந்தி செல்லவோ அல்லது U Turn எடுக்கவோ கூடாது. நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் லேனில் தான் தொடர்ந்து பயணிக்க வேண்டும். பொதுவாக இந்த கோடுகள் மலைப்பாதைகளில் அதிக வளைவு உள்ள இடங்களில் மற்றும் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ள இடங்களில் வரையப்பட்டிருக்கும். 

இடைவெளிவிட்டு வெள்ளை கோடுகள் 

சாலையின் நடுவே இடைவெளி விட்டு வெள்ளை கோடுகள் போடப்பட்டிருந்தால், அதற்கும் சில விதிகள் உள்ளன. நீங்கள் இது போன்ற சாலைகளில் வாகனங்களை முந்தி செல்லலாம். இருப்பினும் எதிரேவரும் வாகனங்களை பார்த்து கவனித்து பாதுகாப்பாக வந்து செல்வது நல்லது. பைபாஸ் சாலைகளில் இது போன்ற இடைவெளி விட்டு வெள்ளை கோடுகள் போடப்பட்டிருக்கும். 

தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் 

சாலைகளில் நடுவில் மஞ்சள் கோடுகள் இடைவெளி இல்லாமல் போடப்பட்டிருந்தால், வாகனங்களை முந்தி செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது என்று அர்த்தம். நீங்கள் பயணிக்கும் லேனில் இருந்து, முன்னாள் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லலாம். ஆனால் மஞ்சள் கோடுகளை தாண்டி மற்ற லேனில் செல்லக்கூடாது. இவை விபத்துக்களை தவிப்பதற்காக போடப்படும் கோடுகளாகும். 

இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் 

சில சாலைகளில் சாலை நடுவே இரண்டு மஞ்சள் கோடுகள் இடைவெளி இல்லாமல் போடப்பட்டிருக்கும். இது போன்ற சாலைகளில் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது என்பதுதான் விதி. இந்த சாலைகளில் முந்திச் செல்லவும் அல்லது யுடன் எடுப்பதற்கோ அனுமதி இல்லை. பொதுவாக இருவழிச் சாலைகளில் இந்த கோடுகள் போடப்பட்டிருக்கும். 

இடைவெளி உள்ள மஞ்சள் கோடுகள் 

சாலைகளில் இடைவெளி விட்டு மஞ்சள் கோடுகள் போடப்பட்டிருந்தால் நீங்கள் வாகனங்களை முந்திச் செல்லலாம். இருப்பினும் வேகமாக செல்வதை தவிர்த்து பாதுகாப்பான முறையில் முந்தி செல்வது நல்லது. இந்த கோடுகள் வேகத்தை குறைப்பதற்காக எச்சரிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.

zeenews

 


Post a Comment

0 Comments