
குழந்தையை பெற்றுடுக்கையில், பெற்றோர்களாக இருப்பவர்கள் அதற்கு நிதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், அப்படி அவர்களால் ஒரு குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில், அவர்களால் என்ன செய்ய முடியும்? இந்த சமயத்தில்தால் குழந்தைகளை அந்த பெற்றவர்கள் தனியே தவிக்க விடுகிறார்கள். அப்படி தன் குழந்தைகள் ஆகிவிடக்கூடாது என்று நினைத்த தந்தையின் செயல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்ட தந்தை!
மலேசியாவின் கோலாலம்பூரில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கிருக்கும் ஒருவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகியிருக்கிறது. இவரது பெயர், Huang Guowei. இவரும், இவரது மனைவியும் கடந்த 2024ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை. விவாகரத்துக்கு பின், இந்த குழந்தைகளின் கஸ்டடி, இவரிடம்தான் இருந்துள்ளது.
தன் முன்னாள் மனைவியால் குழந்தைகளின் கஸ்டடிக்காக துன்புருத்தப்பட்டதாக கூறும் இண்டஹ் நபர், கோலாலம்பூரில் லாரி டிரைவர் வேலை கிடைத்த பிறகு குழந்தைகளை தன்னுடனேயே வைத்துக்கொண்டுள்ளார்.
வறுமையால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் போயுள்ளது. மூன்று வேளை உணவு கூட சரியாக கிடைக்காமல் இருந்துள்ளது. குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் இடத்திலும் அதிகமாக கட்டணம் வசூலித்திருக்கின்றனர். இதனால், ஒரு முடிவுக்கு வந்த அந்த தந்தை, தன் மூன்று குழந்தைகளையும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்து விட்டார்.
இவரை விட்டு பிரிகையில், அந்த மூன்று குழந்தைகளும் தேம்பி தேம்பி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தந்தை சொல்வது என்ன?
குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இதை செய்ததாக கூறும் Huang, தான் அடிக்கடி வந்து குழந்தைகளை சந்திப்பேன் என்றும், குழந்தைகளை விட்டு பிரிகையில் அவர்கள் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். குழந்தைகளை அவ்வப்போது வந்து பார்த்து செல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments