Ticker

6/recent/ticker-posts

செவ்வந்தியுடன் டீல் – வடக்கில் 4 பேர் கைது


கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியாச்சகர் ஊட்லர் உறுதிபடுத்தியுள்ளார்.

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள செவ்வந்தி உள்ளிட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இவ்வாறான கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் மாட்டுப்படலாம் என்றும் சந்தேகிக்க முடிகிறது.

lankatruth

 


Post a Comment

0 Comments