
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்திலிருந்து விலைமதிப்பற்ற பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பட்டப்பகலில் 7 நிமிடத்தில் 8 நகைகள் களவாடப்பட்டன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கொள்ளையர்கள் தப்பியோடும்போது கற்கள் பதித்த கிரீடத்தைக் கீழே போட்டுவிட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொள்ளைக்குப் பிறகு லூவர் அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளைப் பிடித்து நகைகளை மீட்க அனைத்தும் செய்யப்படுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்தார்.
காவல்துறையினர் 4 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
60 பேர் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
உலகிலேயே ஆக அதிகமானோர் செல்லும் அருங்காட்சியகம் லூவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான மோனா லிசா (Mona Lisa) ஓவியமும் அங்குதான் உள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments