Ticker

6/recent/ticker-posts

Ad Code



குறட்டையை தடுக்க முக்கோண தலையணைகள் உதவுமா?


மூச்சுத் திணறல், உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அறிகுறியாக குறட்டை அமைகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். சமீப காலமாக முக்கோண தலையணைகள் பயன்படுத்துவது குறட்டைக்கு தீர்வளிக்கும் வகையில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

இடைவிடாத குறட்டை என்பது தொல்லை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், அவை உடல்நல பாதிப்புகளுக்கு அறிகுறியாக அமைகிறது. எனவே, குறட்டையை தடுப்பதற்கான நெறிமுறைகளை வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, முக்கோண வடிவிலான தலையணைகளை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ ரீதியாக முக்கோண வடிவிலான தலையணைகளை பயன்படுத்துவது நன்மை அளிக்கும் என மருத்துவர் ஹரிச்சந்திரன் கூறுகிறார். “தொண்டைத் தசைகள் தளர்தல், நாக்கின் நிலை அல்லது தூக்கத்தின் போது மூக்கடைப்பு போன்ற காரணங்களால் சுவாசப்பாதை பகுதியளவு தடைபடும் போது அடிக்கடி குறட்டை ஏற்படுகிறது. முக்கோண தலையணைகளை பயன்படுத்துவதால் உங்கள் உடல் மேல்நோக்கி உயர்த்தப்படுகிறது. இதனால், காற்றோட்டம் மேம்படுகிறது“ என அவர் தெரிவித்துள்ளார்.

"உடல் மற்றும் தலையை உயர்த்தி வைத்திருக்கும் விதமாக முக்கோண தலையணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை காற்றுப் பாதையை மேம்படுத்துகிறது" என்று மற்றொரு மருத்துவரான சமீர் கர்தே குறிப்பிடுகிறார்.

எனினும், எல்லோருக்கும் உகந்த தீர்வாக இது அமையாது என்றும், சிலரது தூக்க நேரத்தை இது பாதிக்கும் என்றும் மருத்துவர் சமீர் கர்தே தெரிவித்துள்ளார்.

முக்கோண தலையணைகளை பயன்படுத்துவது முற்றிலும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வாகாது எனக் கூறியுள்ள மருத்துவர் ஹரிச்சந்திரன், இவை தற்காலிக தீர்வாக விளங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை முறை மாற்றங்களான உடல் எடைக் குறைப்பு, தூங்குவதற்கு முன்பு மது அருந்துவதை தவிர்த்தல், சீரான உறக்கம் ஆகியவற்றை கடைபிடிக்கும் போது, முக்கோண தலையணைகளை உபயோகிப்பது பலனளிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறட்டை பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்தால் மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

indianexpress





 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments