Ticker

6/recent/ticker-posts

மினி துப்பாக்கியை வைத்து பாங்காக்கை அலறவிட்ட இந்தியர்.. இறுதியில் ட்விஸ்ட்!


பாங்காக்கின் சியாம் சதுக்கப் பகுதியில், துப்பாக்கி வடிவ லைட்டரைக் கொண்டு மக்களையும் காவல்துறை அதிகாரிகளையும் மிரட்டியதற்காக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாங்காக்கின் பாத்தும் வான் மாவட்டம், சியாம் சதுக்க சோய் 6 இல் உள்ள நோவோடெல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 41 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர், சாலையில் நடனமாடியபடி, தன் கையில் இருந்த துப்பாக்கி வடிவிலான ஒரு பொருளைக் கொண்டு அங்கு இருந்த மக்களை நோக்கி சத்தம்போட்டு கூச்சலிட்டுள்ளார்.

இந்தத் தகவல் பாத்தும் வான் காவல்துறைக்கு தெரியவர உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த நபரை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அந்த நபர் அதிகாரிகளையும் துப்பாக்கி வடிவ பொருளைக் கொண்டு மிரட்டிவந்தார். பின்னர் ஒருவழியாக அந்த நபரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

அதன் பின்னர் அவர் கையில் இருந்தது துப்பாக்கி வடிவிலான சிகரெட் லைட்டர் என்பது தெரியவந்தது. காவலர்கள் பிடிக்கும் வரை அந்தப் பகுதியையே அலறவிட்டிருந்த நபர், காவல்துறையில் பிடிபட்டதும் அழுது கெஞ்சினார். மேலும், தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார்.

பிடிபட்ட நபர் இந்தியாவைச் சேர்ந்த 41 வயதான சாஹில் ராம் தடானி என அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து அவர்  பாத்தும் வான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அச்சுறுத்தும் நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் கஞ்சா போதையின் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

news18

 


Post a Comment

0 Comments