Ticker

6/recent/ticker-posts

ஒளவையாரின் நல்வழி பாடல்!-8


பாடல் - 15.

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

விளக்கம்:

சிவாய நம என்று துதித்தி வாழ்பவர்களுக்கு எந்த துன்பமும் எந்த நாளிலும் வராது. இது மட்டுமே விதியை வெல்வதற்குரிய ஞானமாகும். இது அல்லாத பிற ஞானங்கள் எல்லாம் விதியின் படியே ஆகிவிடும்.

பாடல் - 16.

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

விளக்கம்: 

தண்ணீரின் சுவை அது இருக்கும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து அமையும். மனிதர்களின் பெருமை அவர்கள் வழங்கும் கொடைத் தன்மையைப் பொறுத்தும், கருணைச் செயல்கள் மூலமும் அமையும். 

பெண்களின் பெருமையை அவர்களது கற்பு நெறி மாறாத பண்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

(தொடரும்) 

 


Post a Comment

0 Comments