
வழி நெடுகப் பார்த்து வந்தேன்.
வட்ட நிலா தெரியலையே.
விழி திறந்து காத்திருந்தேன்.
வெண்ணிலா வரவில்லையே.
என்னடி என்னடி என்
முன்னே நில்லடி.
கண்ணாடி கண்ணாடி
முகம் காட்டிக் கொள்ளடி.
கண்ணீர் முட்டுதடி
கவிதையும் குட்டுதடி.
கானல்நீரைப் பாருமடி.
உனைக் காணாமல் வடிக்கிறேனடி .
சொல்லாலே அடித்தவளே
காதலைச் சொல்லத்தான்
துடிக்கிறேனடி.
பூவாட்டம் மலர்ந்தவளே
போராட்டம் போதுமடி.
பூகம்பம் நெஞ்சுக்குள்ளே
போர்க்களமாக்குதடி .
பூத்திருக்கும் காதலத் தான்
சேர்த்தறுக்கப் பார்க்குதடி.
போதும் போதுமடி
பூமகளே ஓடி வாருமடி
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments