Ticker

6/recent/ticker-posts

"நான் சிறைக்குச் சென்றேன்; நீங்கள் கிட்டத்தட்ட சென்றுவிட்டீர்கள்" - டிரம்ப்பிடம் அன்வார்


கோலாலம்பூரில் நடக்கும் ஆசியான் மாநாட்டுக்கு வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம்  (26 அக்டோபர்) வரவேற்றார்.

திரு அன்வார் தமது உரையில் வேடிக்கையாகக் குறிப்பிடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.

"எங்களிடையே பல ஒற்றுமைகள் உண்டு. நான் சிறைக்குச் சென்றேன்; நீங்கள் கிட்டத்தட்ட சென்றுவிட்டீர்கள்," என்று திரு டிரம்ப்பைக் குறிப்பிட்டு, திரு அன்வார் சொன்னார்.

அவர் திரு டிரம்ப்பின் துணிச்சலையும் வித்தியாசமாகப் பாராட்டினார்.

திரு டிரம்ப் கோலாலம்பூரைச் சென்றடைந்தபோது அவர் திரு அன்வாரை ஒன்றாகக் காரில் ஏறும்படிக் கேட்டதாகத் திரு அன்வார் உரையில் சொன்னார்.

அது பாதுகாப்பு விதிகளுக்கு எதிரான செயல் என்றாலும் திரு டிரம்ப் தாராளமாக விதியை மீறியதாக அவர் கூறினார்.

"அமைதிக்கு வலுவாகக் குரல் கொடுக்கும் தலைவர்கள் தேவை. அவ்வாறு குரல் கொடுப்பதற்குச் சில முறை விதிகளை மீறவேண்டும். நீங்கள் இன்று செய்ததைப் போல்," என்று திரு அன்வார் வேடிக்கையாகச் சொன்னார்.

கம்போடியாவும் தாய்லந்தும் சண்டைநிறுத்த உடன்பாட்டில் இன்று கையெழுத்திட்டன.
@channelnewsasia "We share a lot of things in common. I was in prison, but you almost got there," joked Malaysian Prime Minister Anwar Ibrahim to President Donald Trump at the signing ceremony of a peace deal between Thailand and Cambodia in Kuala Lumpur on Sunday (Oct 26). Mr Trump is in town to preside over the ceremony, as well as for the ASEAN summit in the Malaysian capital. #malaysianews #malaysia #usnews #usa #trump #cambodia #thailand #cambodianews #thailandnews ♬ original sound - CNA
அமைதி ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப்பின் பங்கிற்குத் திரு அன்வார் நன்றி தெரிவித்தார்.

தாய்லந்து, கம்போடியா இடையே பல ஆண்டுகளாக நிலவிய பூசல் ஜூலை மாதம் மோசமானது. 

அப்போது இரு நாடுகளுக்கும் பொதுவான அமைதி ஒப்பந்தத்தைத் திரு டிரம்ப் மலேசியாவுடன் சேர்ந்து வழிநடத்தினார்.

seithi

 


Post a Comment

0 Comments