Ticker

6/recent/ticker-posts

கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்


கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சையும் உடனடியாக நிறுத்துவதாய் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ரோனல்ட் ரீகன் (Ronald Reagan) வர்த்தக வரிகள் பற்றிப் பேசியதைக் கனடா தனது விளம்பரத்தில் தவறாகச் சித்திரித்திருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

ரீகன் சொன்னதை அந்த விளம்பரம் தவறாகப் பிரதிபலிப்பதாக வெள்ளை மாளிகை கூறியது.

கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வர்த்தக வரிகளைக் குறைப்பது பற்றிப் பேச வெள்ளை மாளிகையில் திரு டிரம்ப்பைச் சந்தித்திருந்தார்.

சந்திப்பு இடம்பெற்ற 2 வாரங்களில் புதிய திருப்பம் வந்துள்ளது.

வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் கனடாவின் பொருள்களை நியாயமற்ற வழியில் அமெரிக்கா பெறுவதை அனுமதிக்கப் போவதில்லை என்று கனடா கூறியிருக்கிறது.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகியவை வைத்துள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மறுஆய்வு செய்யப்படும்.

nambikkai

 


Post a Comment

0 Comments