Ticker

6/recent/ticker-posts

"பத்மேயிடமிருந்து எந்தப் பணமும் பெறவில்லை":பியூமி ஹன்சமாலி


அக்டோபர் 21, 2025 அன்று, மொடல் அழகியானபியூமி ஹன்சமாலி காவல் நிலையத்திற்கு, ஒரு தனிப்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுவதற்காக அங்கு வந்ததாகக் கூறினார். 

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டன . 

பியூமி ஹன்சமாலி ஒரு பிரபலமான மாடல் மற்றும் அழகு ராணி. சமீபத்தில், கைது செய்யப்பட்டு  தற்போது சிறையில் இருக்கும் கெஹெல்பதரா பத்மேயுடனான அவரது நட்பு குறித்து போலீசார் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, துபாய் சென்று அங்குள்ள கெஹெல்பதராவின் குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் பேசியதாகவும் பூமி தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதினார். பத்மேயிடமிருந்து தனக்கு எந்தப் பணமும் பெறவில்லை என்று அவர் கூறினார். 

 


Post a Comment

0 Comments