
ராமதாசை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாகவும், அவருக்கு எதாவது நடந்தால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
ராமதாசை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாகவும், அவருக்கு எதாவது நடந்தால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
பாமகவில் நிலவும் தந்தை - மகன் மோதலுக்கு மத்தியில், சென்னை பனையூரில் அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, ராமதாஸை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாக விமர்சித்தார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸை ஓய்வெடுக்க விடாமல், பலர் தொந்தரவு செய்வதாக குற்றம்சாட்டிய அன்புமணி, அவருக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் அவர் பேசுகையில், “மருத்துவர் ராமதாஸ் நன்றாக இருக்கிறார். மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதனை செயதார். அவர் செக்அப் சென்றதை என்னிடம் சொல்லி, ‘ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள்’ என்று கூறுகின்றனர். இது அசிங்கமா இருக்கிறது. யார் யாரோ வந்து பார்க்கிறார்கள். ராமதாஸ் என்ன எக்ஸிபிஷனா? இது ராமதாஸின் உயிர். அவரை தூங்கவிடுவதில்லை. அவருக்கு எதாவது நடந்தால் தொலைத்து விடுவேன். அவரை வைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இந்நிலையில், தனது பிறந்த நாளையொட்டி, தாயார் சரஸ்வதியுடன் அன்புமணி நேரில் ஆசி பெற்றார். கடந்த 9 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய அன்புமணிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments