
இறை நேசச் செல்வர் இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் மன்னராக இருந்து, இறுதியில் அரசு துரந்து ஆத்மீக ஞானியாக மாறினார்கள். புனித காபாவினருகே தனது வாழ்நாளை இறைதியானத்தில் கழித்தார்கள்.
இவர்கள் பல்க் நாட்டின் அரசராக இருந்த போது ஒரு முறை அவரின் மாளிகையில் மேல் மாடிக்குள் நுழைந்த ஒரு கிராமவாசி எதையோ அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட மன்னர் அவர்கள் எதை நீர் இங்கு தேடுகிறீர் என வினவ கிராமவாசி எனது காணாமல் போன ஒட்டகத்தை தேடுகிறேன் என்றார்.
இதனைக் கேட்ட அரசர் ஆச்சரியமடைந்தவராக மாடியில் ஒட்டகத்தை தேடுகிறீரே உனக்கு அறிவிருக்கிறதா? என வினவ கிராமவாசி சிரித்தவாறே மாமன்னரே! நீங்கள் இந்த மாடமாளிகையிலிருந்து கொண்டு இறைவனைத் தேடும் போது நான் என் காணாமல் போன ஒட்டகத்தை தேடக் கூடாதா? என வினவினார்
அரசரின் அகக்கண்கள் திறந்து கொண்டன. சிந்தனையில் ஆழ்ந்தார். சிம்மாசனத்தை ஒதுக்கி இறை வழிபாட்டில் தன் வாழ் நாளை கழிக்கலானார்.
0 Comments