செல்போன் பேட்டரி ஏன் வெடிக்கிறது? எப்படி தடுப்பது? இதை செய்யவே கூடாது - எச்சரிக்கும் நிபுணர்

செல்போன் பேட்டரி ஏன் வெடிக்கிறது? எப்படி தடுப்பது? இதை செய்யவே கூடாது - எச்சரிக்கும் நிபுணர்


பேட்டரி உப்பலாக இருந்தால் உடனடியாக மாற்றிட வேண்டுமெனவும், அப்படி செய்தால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தஞ்சை மாவட்டத்தில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்திய இளம்பெண் ஒருவர், செல்போன் வெடித்து தீ பிடித்து நேற்று (செப் 27) உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  செல்போன் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து செல்போன் நிபுணர் ஸ்ரீகுமார் கூறுகையில், செல்போன் வெடிப்பு போன்ற அசம்பாவிதங்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு.  செல்போனில் மதர்போர்டு  பிரச்னையாக இருக்கும் தருவாயில், சார்ஜ் ஏற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும், தற்சமயம் செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்திருப்பவர்களுக்கு தொழில்நுட்பம் குறித்த தெளிவான புரிதல் இல்லை என்று தெரிவித்த அவர், அவர்களின் கவனக்குறைவே  பெரும்பாலான ஆபத்தான நிகழ்வுகளுக்கு வழிவகுப்பதாக குறிப்பிட்டார். மேலும், கூறிய அவர், பேட்டரி உப்பலாக இருந்தால் உடனடியாக அதை மாற்றிவிட வேண்டுமென்றும், அதை  ஊசி வைத்து குத்தி மீண்டும் பயன்படுத்த கூடாது எனவும், அவ்வாறு செய்தால், ஓரிரண்டு மாதங்களில் செல்போன் பேட்டரி வெடிக்க வாய்ப்புண்டு எனவும் எச்சரித்தார்.  நீடித்த நுகர்வு குறித்தும் தரமற்ற அல்லது பாதுகாப்பற்ற செயல்பாடுகள்  குறித்த விழிப்புணர்வை  செல்போன் சேவை கடை ஊழியரால் வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போதே, செல்போன்-ஐ உபயோகப்படுத்தக் கூடாது என்று கடுமையாக எச்சரித்த அவர், பவர் பேங்க் சாதனங்களையும் கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து, மேலும் கூறிய அவர், " அத்தியாவச தேவைகளுக்கு மட்டுமே பவர் பேங்க்  பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக பவர்பேங்க் மூலம் சார்ஜ் ஏற்றப்படும் போது , செல்போன்களில் கூடுதலாக பிரச்னை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். 

பிரச்னைக்குரிய  பேட்டரியை கண்டறிவது சுலபம் என்று தெரிவித்த அவர், "வழக்கமான நேரத்தை விட விரைவாக சார்ஜ் ஏறுவதும், இறங்குவதும், பேட்டரி உப்பலாக இருப்பதும் அதற்கான தெளிவான அறிகுறிகள் என்று கூறினார். 

 " கை குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள் கையில் செல்போன்கள் கிடைக்காதபடி பார்த்து கொள்ள வேண்டும் எனவும்,  மல்டி பின் சார்ஜர் பயன்படுத்தும் போது பிரச்சினை ஏற்பட வாய்ப்பு  இருப்பதாகவும் தெரிவித்தார். 

செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவது தொடர்பாக பேசிய அவர்,  100 சதவீதம் சார்ஜ் ஏற்றி விட்டு பயன்படுத்த வேண்டும். 20 சதவீதத்திற்கும் கீழாக சார்ஜ் குறைந்தால் மட்டுமே, மீண்டும் சார்ஜ் ஏற்ற வேண்டும். போன் வெப்பமானால், இன்டர்னல் ஸ்டோரேஜ் கிளின் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post