Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூரில் உடல்பருமன் கூடியுள்ளது


சிங்கப்பூரில் உடல்பருமனாக இருப்போர் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் தேசிய மக்கள்தொகைச் சுகாதார ஆய்வில் அது புலப்பட்டது.

2019க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் உடல்பருமனாக இருந்தோர் விகிதம் 10.5 விழுக்காடாக இருந்தது.

2023க்கும் கடந்த ஆண்டுக்கும் இடையே அந்த விகிதம் கூடி 12.7 விழுக்காட்டாகப் பதிவானது.

சிங்கப்பூரர்கள் மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றும் வேளையிலும் இந்த விதிதம் கூடியிருக்கிறது.

பொதுவாகப் பலரும் கோவிட் காலத்துக்கு முன்பைப் போல் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் மேலும் பரபரப்பான வாழ்க்கைச் சூழல், மின்னிலக்கச் சாதனங்களில் கூடுதல் நேரம் செலவிடும் போக்கு போன்றவற்றால் உடல்பருமன் பிரச்சினை பெரிதாகியிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு முக்கிய அக்கறை, மனநலன்.

18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் மனநலச் சிக்கலைச் சந்திப்பது கருத்தாய்வில் தெரியவந்தது.

மனஉளைச்சல், பதற்றம், தனிமை போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இளையர்கள் தங்கள் மனநலப் பிரச்சினைகளுக்காக உதவி நாட முன்வரும் போக்கு கூடியிருக்கிறது.

seithi

 


Post a Comment

0 Comments