Ticker

6/recent/ticker-posts

காதலை மறந்தாலும் கடனை மறக்காத காதலர்


சீனாவைச் சேர்ந்த ஆடவர் தமது முன்னாள் காதலியை வலைவீசித் தேடுகிறார்.

காதலி தந்த 10,000 யுவான் (சுமார் 1,800 வெள்ளி) கடனை அடைக்க அவர் முயற்சி செய்வதாக South China Morning Post நிறுவனம் சொன்னது.

லீ 1991ஆம் ஆண்டு மா என்பவரைச் சந்தித்தார்.

அவர்கள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது காதல் மலர்ந்தது.

8 ஆண்டு நீடித்த காதல் லீயின் குடும்பச் சூழலால் முறிந்தது.

எனினும் நிறுவனம் தொடங்க லீக்குப் பணம் தேவைப்பட்டபோது மா அவருக்கு உதவி செய்தார்.

மா முன்பு வசித்த குடியிருப்பு இடிக்கப்பட்டது. அங்கு புதிய கட்டடங்கள் வந்துவிட்டன.

லீ பழைய காதலியின் தொலைபேசி எண்ணைத் தொலைத்துவிட்டார்.

அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக மாவைத் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

கடந்த காலத்தை எண்ணி வருந்துவதாக அவர் சொன்னார்.

லீயின் தேடல் குறித்துப் பலரும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.

லீ காதலியைப் பிரிந்தது தவறு என்று சிலர் கூறினர்.

இன்றைய நிலைப்படி அவர் 10 மடங்கு அதிகப் பணத்தைத் தரவேண்டும் என்று சிலர் கூறினர்.

seithi

 


Post a Comment

0 Comments