
ஆஸி. கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நவம்பர் 2ம் தேதி பைனல் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலியா மகளிர் அணி 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ரேடிசன் புளு ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
2 வீராங்கனைகள் ஹோட்டலில் இருந்து அருகே உள்ள கபேவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் வீராங்கனைகளை பின்தொடர்ந்து சென்றுள்ளதோடு, வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் வீராங்கனைகள் அலறியதில், அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார். உடனே இதுகுறித்து வீராங்கனைகள் அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்சுக்கு தகவல் அளித்தனர்.
அவர் விரைந்து சென்று வீராங்கனைகளை அழைத்து வந்துள்ளார். பின் சம்பவம் குறித்து போலீஸில் புகாரளித்துள்ளனர். தொடர் விசாரணையில் அவரது பெயர் அகில் கான் என்பதும், அவர் மீது பல வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. தற்போது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments