Ticker

6/recent/ticker-posts

பாலஸ்தீன விவகாரம்; இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்


பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால், அமெரிக்காவின் அனைத்து வகையான ஆதரவுகளும் உடனடியாக திரும்பப் பெறப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1967ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றியது. இதில், மேற்கு கரையின் ஆக்கிரமிப்பு தொடர்பாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, இஸ்ரேல்-ஹமாஸ் போரும் மூண்டது. அமெரிக்காவின் தலையீட்டால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மேற்கு கரையை இஸ்ரேல் இணைக்காது என்று தான் அரபு நாடுகளுக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இந்த செயல் அநாகரிகமானது என்றும் டிரம்ப் சாடியுள்ளார். மேற்கு கரையை இஸ்ரேல் இணைத்தால், அமெரிக்காவின் அனைத்து வகையான ஆதரவுகளும் உடனடியாக திரும்பப் பெறப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

news18

 


Post a Comment

0 Comments