உங்களின் உண்மையான நண்பர்களை கண்டறிய 5 வழிகள்..!

உங்களின் உண்மையான நண்பர்களை கண்டறிய 5 வழிகள்..!

வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைக்கும் ஓர் உன்னதமான உறவு என்றால் அது நட்பு தான். நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டால் வாழ்க்கையே மிகவும் மகிழ்ச்சியானதாக மாறிவிடும். ஏனென்றால் நல்ல நண்பர்கள் நல்ல வழியில் செல்வதற்கு வழிகாட்டவும், வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவதற்கு ஏணிகளாவும் இருப்பார்கள். அப்படியான நண்பர்கள் கூட்டம் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள் தான். அதனால், உங்களுடன் இருக்கும் நண்பர்கள் இத்தகைய குணாதிசயம் கொண்டவர்களா? என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமா?. சிம்பிளான 5 வழிகளில் உங்களின் உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். 

உண்மையான நண்பர்களை கண்டறிய 5 வழிகள் ;

துணையாக இருப்பார்கள்

உண்மையான நண்பர்கள் உங்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும், உங்களை விட்டு செல்ல மாட்டார்கள். கடினமான காலங்களில் உடனிருந்து உங்களை தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் இருப்பார்கள். எந்த நிலையிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் கனவுகள், இலக்குகள், ஆசைகளை அடைய உதவி செய்வார்கள். பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நம்பிக்கை, உங்களை அடுத்தகட்டத்தை நோக்கும் நகர்த்தும். உங்களுக்கு ஒரு சோதனை என வந்துவிட்டால், நீங்கள் தேடும் முதல் ஆளாக அவர்களே இருப்பார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களாக இருக்கும் அவரின் துணையை எப்போதும் தேடுவீர்கள். 

பொறுமையான அணுகுமுறை

எந்த உறவிலும் மோதல்கள் வராமல் இருக்காது. ஆனால், மோதல் பகையாக மாறாமல் இருக்கும் ஒரு உறவு நட்பு தான். ஒரு சில நண்பர்களிடம் மட்டுமே மோதல் சில நிமிடங்களில் காணாமல் போகும். வார்த்தைகள் எவ்வளவு கடினமாக பேசியிருந்தாலும் அடுத்தநொடியில் இதயத்தில் இருந்து அவை எல்லாம் வெளியேறி, எப்போதும் போல் இயல்பாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சுதந்திரம் அந்த நண்பர்களிடம் மட்டுமே இருக்கும். கோபம் தவறு என புரிய வைப்பார்கள். இப்படி பேசக்கூடாது என அறிவுறுத்துவார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை கோபத்திலும் தெளிவுடன் வழிகாட்டுவார்கள். யார் சொல்லியும் கேட்காமல் இருந்தாலும், அவர்கள் நட்பின் மொழியில் புரிய வைப்பார்கள். உங்களுக்கும் அந்த விஷயம் புரிந்துவிடும்.  

நல் வழிகாட்டுவார்கள்

உங்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த பொறாமையும் இருக்காது. நீங்கள் அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை என்றால் தான் அவர்களுக்கு கோபம் வரும். இதை செய்திருந்தால் நீ இந்நேரம் அதனை எளிமையாக முடித்திருக்கலாம் என அதட்டி உங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள். அடுத்தமுறை அந்த தவறை நீங்கள் செய்யவும் மாட்டீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றியும் பெறுவீர்கள். நண்பர்கள் மட்டுமே இதை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். 

நேர்மை, நம்பகத்தன்மை

நட்பில் மட்டுமே நேர்மையும், நம்பகத்தன்மையும் வரும். உங்களின் ரகசியங்கள் எல்லாம் எந்த சூழலிலும் அவர்களிடம் காக்கப்படும். எதற்கும் பயப்பட தேவையில்லை என நீங்கள் முழுமையாக நம்பலாம். மோசமானவர்களாக இருந்தால் உங்களைப் பற்றி தெரிந்த விஷயங்களை வைத்து பிளாக்மெயில் செய்வார்கள். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை அடுத்தவர்களிடம் பேசுவார்கள். ஆனால் நல்ல நண்பர்கள் ஒருபோதும் அப்படி செய்யவே மாட்டார்கள். அவர்களுக்கு உங்களைப் பற்றி பிறரிடம் என்ன சொல்வது என்பதுகூட தெரியாது. இப்படியான அணுகுமுறை இருக்கக்கூடிய ஒரு நண்பர் இருந்தால்கூட நீங்கள் பாக்கியசாலிகளே. 

zeenews



 



Post a Comment

Previous Post Next Post